Published : 24 Sep 2021 01:29 PM
Last Updated : 24 Sep 2021 01:29 PM

23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி தடங்கள் கண்டுபிடிப்பு

23 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான மனிதனின் காலடி தடங்கள் வடக்கு அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் தரப்பில் “ வடக்கு அமெரிக்காவின், நியூ மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட புதைப்படிவ கால் தடங்கள் சுமார் 23,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரம்பகால மனிதர்கள் நடமாடுவதை சுட்டிக் காட்டுகின்றன முதல் முறையாக இம்மாதிரியான கால்தடங்கள் 2009 ஆம் ஆண்டு வெள்ளை மணல் தேசிய பூங்காவில் உள்ள ஒரு வறண்ட ஏரிப் படுக்கையில் இம்மாதிரியான கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இம்மாதிரியான கண்டுபிடிப்புகள் நீண்ட காலமாக நிலவும் மர்மத்திற்கு வெளிச்சம் காட்ட இயலும். ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் எப்போது அமெரிக்காவிற்கு வந்தனர் என்பதையும் கண்டுபிடிக்க முயல உதவிகரமாக இருக்கும்.

ஆசியாவை, அலாஸ்காவுடன் இணைத்த நிலப் பாலம் வழியாக முந்தையை மனித இடப்பெயர்வுகள் இருந்ததாகவும் நம்படுகிறது. 13,000 முதல் 26,000 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மனித குடியேற்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த காலடி தடங்களை பாதுகாப்பதற்கு ஒரே வழி இந்தத் தடங்களை புகைப்படங்களாக எடுத்துக் கொள்வது மற்றும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அவற்றை தெளிவாக்குவது. குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் காலடி தடங்களும் கண்டறியப்பட்டுள்ளன” என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x