Published : 23 Sep 2021 09:52 AM
Last Updated : 23 Sep 2021 09:52 AM
பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியாக அமெரிக்கா செல்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பாகிஸ்தான் வான்வெளியாகத்தான் பிரதமர் மோடியின் விமானம் சென்றதாக அரசு சார்பில் இதுவரை அதிகாரபூர்வமாக தகவல் ஏதுமில்லை. ஆனால், பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்துள்ளார். வாஷிங்டனில் இன்று அமெரிக்க அதிபர் ஜே பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரையும் சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளார். அதன்பின் குவாட் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களைச் சந்தித்துப்பேசஉள்ளார்.
கடந்த முறை அதிபர் தேர்தலுக்கு முன்பாக அமெரிக்க சென்ற பிரதமர் மோடி அதன்பின் இப்போதுதான் சென்றுள்ளார். பிரதமர் மோடி பயணித்த போயிங்777-337 விமானம் டெல்லியிலிருந்து புறப்பட்டு 11.40 மணி அளவில் பாகிஸ்தான் வான்வெளியைக் கடந்ததாக விமானங்களைக் கண்காணிக்கும் பிளைட்ராடார் 24 எனும் இணையதளம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி பாகிஸ்தான் வான்வெளியாகச் செல்வதற்கு விமானம் புறப்பட்ட பின்புதான் பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதியளித்தனர். ஒருவேளை பிரதமர் மோடியின் விமானத்துக்கு பாகி்ஸ்தான் அனுமதியளிக்காமல் இருந்திருந்தால், பிரதமர் மோடி பிராங்பர்ட் சென்று அங்கிருந்து அமெரிக்கா சென்றிருப்பார்.
கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி, சவுதி அரேபியா செல்வதற்கு பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதமும், பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் பிரதமர் மோடி தனது நீண்ட விமானப் பயணத்தில் தனது அலுவலகப் பணிகளைக் கவனித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நீ்ண்ட விமானப் பயணம் என்பதால், பல்வேறு முக்கியக் கோப்புகள், அலுவலகப் பணிகளை விமானப் பயணத்திலேயே பிரதமர் மோடி முடித்துள்ளார். பிரதமர் மோடி விமானத்தில் அலுவலகப் பணிகளைப் கவனிக்கும் புகைப்படமும் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT