Published : 26 Feb 2016 01:19 PM
Last Updated : 26 Feb 2016 01:19 PM
ஆப்கானிஸ்தான் சிறுவன் அகமதிக்கு கால்பந்து வீரர் மெஸ்ஸி தனது கையெழுத்திட்ட சட்டைகளையும், கால்பந்தையும் அனுப்பியுள்ளார்.
கால்பந்து விளையாட்டில் சிறுவன் அகமதிக்கு அதிக ஆர்வம். ஆர்வ மிகுதியில், அர்ஜென்டினா கால்பந்து அணியின் சீருடையில் உள்ள வடிவத்தைக் கொண்ட பிளாஸ்டிக் பையை ஆப்கன் சிறுவன் முர்தசா அகமதி அணிந்திருந்த புகைப்படம் உலகம் முழுவதும் இணையவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இது மெஸ்ஸிக்கும் தெரிய வந்தது.
இந்நிலையில், ஆப்கன் சிறுவன் அகமதிக்கு, மெஸ்ஸி தான் கையெழுத்திட்ட மேல்சட்டைகளை அனுப்பியிருக்கிறார். அந்தச் சட்டையுடன் ஒரு கால்பந்தையும் அனுப்பியுள்ளார். அது காபுல் கால்பந்து கூட்டமைப்பு அலுவலகத்தில் உள்ளது.
மெஸ்ஸி அனுப்பிய சட்டையுடன் அகமதி இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
இதற்கிடையில், சிறுவனை எப்படியாவது மெஸ்ஸியை சந்திக்க வைக்க வேண்டும் என அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT