Published : 14 Feb 2016 10:15 AM
Last Updated : 14 Feb 2016 10:15 AM
நினைவுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த கனடா நபருக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவுத் திறன் திரும் பியது.
தமிழில் வெளியான கஜினி படத்தில் நடிகர் சூர்யா நினை வுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப் பட்டவராக நடித்திருப்பார். அதே போன்ற குறைபாட்டால் கனடா வைச் சேர்ந்த எட்கர் லாதுலிப் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதற்காக அவர் கனடாவின் ஆன்டோரியா மாகாணம், கிட்சென்னர் நகரில் உள்ள சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 1986-ம் ஆண் டில் அவருக்கு 21 வயதாக இருக் கும்போது மையத்தில் இருந்து அவர் காணாமல் போனார்.
கடைசியாக அவர் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பஸ்ஸில் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர் ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றவர் என்பதால் நயாகரா நீர்வீழ்ச்சியில் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று நம்பப்பட்டது.
இந்நிலையில் கனடாவின் செயின்ட் கேத்தரின்ஸ் நகரில் வேறொரு பெயரில் அவர் வசித்து வருவது அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 30 ஆண்டு களுக்குப் பிறகு அவருக்கு நினைவு திரும்பி தனது உண்மையான பெயர் எட்கர் லாதுலிப் என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட மரபணு சோதனையில் அவர் கூறியது உண்மை என்பது தெரியவந்ததுள்ளது.
எட்கரின் குடும்பத்தினர் தற்போது ஒட்டாவாவில் வசிக்கின்றனர். 51 வயதாகும் எட்கர் விரைவில் தனது தாயார் சில்வியாவுடன் இணைய உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT