Published : 14 Feb 2016 12:44 PM
Last Updated : 14 Feb 2016 12:44 PM
சிரியாவில் சண்டை நிறுத்தம் அமல் படுத்தப்படும் என்று அமெரிக் காவும் ரஷ்யாவும் கூட்டாக அறிவித்துள்ளன.
ஆனால் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் தொடரும் என்று அதிபர் ஆசாத்தும், அதிபர் பதவி விலகும்வரை போரிடுவோம் என்று கிளர்ச்சியாளர்களும் அறிவித் திருப்பதால் சண்டை நிறுத்தம் கேள்விக்குறியாகி உள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால் அதிபர் ஆசாத் படைகள், மிதவாத எதிர்க்கட்சி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே சண்டை நிறுத்தம் அமல் செய்யப்படும் என்று அமெரிக் காவும் ரஷ்யாவும் அறிவித்துள் ளன. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா வும் மிதவாத எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்நிலையில் அதிபர் ஆசாத் அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:
அமைதி முயற்சியை நான் ஆதரிக்கிறேன். அதேநேரம் தீவிர வாதிகளுக்கு எதிரான எங்கள் போர் தொடரும். துருக்கியில் இருந்து அலெப்போ நகர் வழியாக தீவிர வாதிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப் படுகின்றன. இதை தடுக்கவே அலெப்போ நகரை சுற்றி வளைத்துள்ளோம். தீவிரவாதி களிடம் இருந்து ஒட்டுமொத்த சிரியாவையும் மீட்போம். அதுவரை எங்கள் போர் ஓயாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.
கிளர்ச்சியாளர்கள் பிடிவாதம்
அதிபர் ஆசாத்துக்கு எதிராக 7 கிளர்ச்சிக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அவர் களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. அவற்றில் பைலாக் அல்-ஷாம் குழுவைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் ரியாத் ஹிஜாப் கூறியபோது, சிரியா அதிபர் ஆசாத் பதவி விலக வேண்டும். அவரை ஆட்சியில் இருந்து தூக்கியெறிவதே எங்களின் குறிக்கோள். அதுவரை போரை நிறுத்தமாட்டோம் என்று தெரிவித்தார். அதிபர் ஆசாத்தும் கிளர்ச்சியாளர்களும் தத்தம் கொள்கைகளில் பிடிவாதமாக இருப்பதால் அங்கு சண்டை நிறுத்தத்தை அமல் செய்வது கேள்விக் குறியாகி உள்ளது.
இவை தவிர ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, அல்-கொய்தாவின் அல்-நஸ்ரா முன்னணி ஆகியவையும் சிரியாவை தொடர்ந்து ஆக்கிர மித்து வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் துருக்கி எல்லையோரம் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் தஞ்ச மடைந்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT