Published : 14 Sep 2021 08:25 PM
Last Updated : 14 Sep 2021 08:25 PM

தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு: பாகிஸ்தான் சொல்லும் நிபந்தனைகள் என்னென்ன?

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைந்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு உண்டா என்ற கேள்விக்கு அமெரிக்காவுக்கான பாக் தூதர் அசத் மஜீத் கான் விளக்கமளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தலிபான்களின் ஆட்சி அமைந்தது. அங்கே தற்போது முறைப்படி பிரதமர், துணைப் பிரதமர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கனின் அண்டை நாடான பாகிஸ்தான் தலிபான்களுக்கு எவ்விதமான ஆதரவை நல்கும் என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கான பாக் தூதர் அசத் மஜீத் கான் அளித்த பேட்டியில் இது தொடர்பாக விரிவாகப் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது:

தலிபான்கள் மனித உரிமை மதிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். அவர்கள் சர்வதேச நாடுகளுக்கு அளித்த வாக்கினைக் காப்பாற்ற வேண்டும். தலிபான்கள் மனித உரிமையைப் பேண வேண்டும், பெண்கள் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

இப்போதைக்கு ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்துள்ளது. அதனை சீர் செய்ய வேண்டும். சர்வதேச சமூகம் இந்த வேளையில் ஆப்கானிஸ்தானுடன் எப்படி இணைந்து மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்கலாம் என்றே யோசிக்க வேண்டும். ஆதரவு அளிப்பது, புறக்கணிப்பது எல்லாம் அப்புறம் யோசிக்க வேண்டியவை.

ஆப்கானிஸ்தானில் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வர வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது. அதையேத்தான் நாங்களும் விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா தொடர்பான கேள்விக்கு, இந்தியாவில் துரதிர்ஷ்டவசமாக அடிப்படைவாத ஆட்சி நடக்கிறது. இம்ரான் கான் பிரதமரானவுடனேயே இந்தியாவுக்கு நட்புக்கரம் நீட்டினார். ஆனால், மோடி அரசோ ராணுவ பராக்கிரமங்கள் மூலம் பதிலளித்தது. காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறோம் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x