Published : 14 Sep 2021 06:37 PM
Last Updated : 14 Sep 2021 06:37 PM
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஒரு மாதமாகிவிட்டது. இந்நிலையில் தலைநகர் காபூலில் உள்ள புல் இ சர்கி சிறைச்சாலையை தலிபான் கமாண்டர்கள் சிலர் பார்வையிட்டனர்.
அவர்களில் ஒருவர் சிறைவாசிகள் விட்டுச் சென்ற பளுதூக்குதல் கருவியை தூக்கிப் பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காபூல் புறநகரில் இருக்கும் இந்த சிறைச்சாலையின் சுவர்கள் பல கொடூரங்களின் சாட்சி சொல்லும் எனக் கூறுகின்றனர் அதில் கைதிகளாக இருந்து மீண்டவர்கள்.
இந்தச் சிறையில் முந்தைய ஆட்சியின்போது தலிபான்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த சிறைச்சாலையைக் கைப்பற்றிய தலிபான்கள் அனைவரையும் விடுவித்தனர். அங்கிருந்த அரசுக் காவலர்களும் வெளியேறினர். தற்போது அங்கு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் ஒருசிலர் மட்டும் அடைபட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறைச்சாலையை தனது சகாக்களுடன் பார்வையிட்ட தலிபான் கமாண்டர் ஒருவர், நான் இந்தச் சிறையில் 14 மாதங்கள் இருந்துள்ளேன். என் வாழ்வின் இருண்ட நாட்கள் அவை. இந்தச் சிறையில் கொடுமைகள் பல நடக்கும். இப்போது நான் இந்த சிறைக்கே பயமின்றி வந்துள்ளேன் என்று கூறினார்.
இந்தச் சிறையில் 5000 பேர் தான் இருக்க முடியும் ஆனால் முந்தைய ஆட்சியில் இந்தச் சிறையில் எப்போதும் 10000 பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதனால் இந்தச் சிறையில் மனித உரிமை மீறல் குறித்து அவ்வப்போது சமூக செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துவந்ததும் குறிப்பிடத்தக்கது.
சுதந்திரம் குறித்து சிறைச்சாலையை சுற்றிப் பார்த்தபின்னர் கருத்து தெரிவித்த தலிபான் கமாண்டர், ஆப்கன் மக்களின் சுதந்திரம் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பாரா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT