Published : 13 Sep 2021 08:00 PM
Last Updated : 13 Sep 2021 08:00 PM
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வியட்நாம் அரசு கடுமையாகப் போராடி வருகிறது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “வியட்நாமில் கடந்த ஜூலை மாதம் முதலே கரோனா அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கரோனா மையமாக உள்ள ஹோ சி மின்ஹ் நகரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் செப்டம்பர் மாதம் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளன. அந்நகரில் உள்ள 90 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்துவதை அரசு தீவிரப்படுத்தியுள்ளது” என்று செய்தி வெளியாகியுள்ளது.
வியட்நாமில் இதுவரை 5% பேருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 62 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், வியட்நாம், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் 5.66 பில்லியன் மக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT