Published : 08 Sep 2021 10:40 PM
Last Updated : 08 Sep 2021 10:40 PM
பிரிட்டன் தலைநகர் லண்டன் சூப்பர் மார்க்கெட்டுகளில் பால், குடிதண்ணீர் இன்னும் பிற அத்தியவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் வளர்ந்த நாடான பிரிட்டனுக்கு ஏன் எந்த நிலை என்று பார்த்தால், பிரெக்ஸிட் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகியதால் சப்ளை செயின் எனப்படும் விநியோகித்தல் சங்கிலி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா பரவலால் உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அங்கு உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, பிரிட்டனில் மெக் டொனால்டு நிறுவனத்தில் மில்க் ஷேக் தொடங்கி, பப் செயின்களில் பீர் வரை அனைத்துக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக உள்ளூர் வாசி ஒருவர் கூறுகிறார்.
அதேபோல் ட்ரக் ஓட்டுநர்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கரோனா தீவிர அலையின்போது பிரிட்டனில் இருந்து வெளியேறியவர்கள் யாரும் இன்னும் திரும்பவில்லை. இதனால், ஓரிடத்திலிருந்து இன்னொரு பகுதிக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோ ஆப் என்ற லண்டனின் கூட்டுறவு சூப்பர்மார்க்கெட்டானது, பொருட்கள் விநியோகத்தில் உள்ள குறைபாட்டைக் களைய தற்காலிகமாக 3000 பேரை பணியமர்த்தியுள்ளதாகத் தெரிவித்தது. பிரிட்டனில் தற்போது 1 லட்சம் லாரி ஓட்டுநர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி பிரிட்டன் ப்ரெக்ஸிட் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது.
அப்போதே சில பின்னடைவுகள் ஏற்பட்டன. அதை மேலும் வலுவடையச் செய்தது அடுத்தடுத்து தாக்கிய கரோனா அலைகள். தற்போது மிகுந்த நெருக்கடியான சூழலில் பிரிட்டன் உள்ளது. கரோனா ஒருபுறம் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை இன்னொரு புறம் என்று போரிஸ் ஜான்சனின் அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT