Published : 08 Sep 2021 05:12 PM
Last Updated : 08 Sep 2021 05:12 PM
மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ அதிகாரிகள் தரப்பில், “ மெக்சிகோவில் செவ்வாய்க்கிழமை இரவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 11 கிமீ ஆகும்.
இதன் காரணமாக மெக்சிகோவின் தலை நகர் மெக்சிகோ சிட்டியில் கட்டிடங்கள் குலுங்கின. சக்தி வாய்ந்த நில நடுக்கம் காரணமாக அச்சம் காரணமாக சாலைக்கு ஓடி வந்தனர். மேலும் நிலநடுக்கத்தினால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. ” என்று தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்துக்கு இதுவரை ஒருவர் பலியாகி இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று மெக்சிகோ அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Se registró un fuerte sismo de magnitud 6.9 grados, con epicentro en Acapulco, Guerrero, el movimiento telúrico se sintió en varios estados del país https://t.co/nZCVw2o909 pic.twitter.com/JfzUsf00sT
— Grupo Fórmula (@Radio_Formula) September 8, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT