Published : 07 Sep 2021 05:10 PM
Last Updated : 07 Sep 2021 05:10 PM

சீனாவில் கடும் வறட்சி : 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

ஜூலை முதல் தொடர்ந்து வெப்பமான வானிலை நிலவுவதால் வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்கள் வறட்சியை எதிர்க் கொண்டுள்ளன.

இதுகுறித்து சினுவா வெளியிட்ட செய்தியில், “ சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்களில் நிலவும் அதீத வெப்ப நிலை காரணமாக கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 60,000 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம் அடைந்துள்ளது.

செப்டம் மாதமும் கன்சு மாகாணத்தில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்றும், இதனால் வறட்சி சில நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பூமியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸைக் கடக்கும் சூழல் ஏற்பட்டால் மனித இனம் வாழ்வதற்கான சூழல் இல்லாமலாகிவிடும் என்று ஐபிபிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x