Published : 04 Sep 2021 06:23 PM
Last Updated : 04 Sep 2021 06:23 PM
பஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் பொதுமக்கள் 17 பேர் பலியாகினர்.
இந்நிலையில், "கொண்டாட்டத்துக்காக வானத்தை நோக்கிச் சுட வேண்டாம். தோட்டாக்கள் அப்பாவி பொதுமக்கள் மீது பாய்ந்து அவர்களின் உயிரைப் பறித்துவிடும். ஆகையால் வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி மட்டுமே சொல்லுங்கள்" என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பஞ்ஷிர் பகுதியில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய வெற்றிக் கொண்டாட்டத்தில் துப்பாக்கிக் குண்டுகள் வானத்தை நோக்கி வெடிக்கப்பட்டதில் 17 அப்பாவி பொதுமக்கள் இறந்ததாக டோலோ செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியது.
This is what Kabul sounds like right now pic.twitter.com/QxaS8wWrfi
— Ali M Latifi (@alibomaye) September 3, 2021
வீழ்ந்ததா பஞ்ஷிர்?!
பஞ்ஷிர் மாகாண மக்கள் தலிபான்களை ஏற்கவில்லை. அங்கு தலிபான்களுக்கு எதிராக தீவிர சண்டை நடந்து வந்தது. பஞ்ஷிர் பகுதி போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோது பஞ்ஷிரை அவர்களால் நெருங்க இயலவில்லை.
ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே அந்தக் கோட்டையில் இருந்து வந்தவர். தலிபான்களை நீண்ட காலமாக எதிர்த்து வருகிறார்.
இந்தநிலையில் பஞ்ஷிர் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வந்ததாக தலிபான்கள் அறிவித்தனர்.
முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே தப்பியோடி விட்டதாக தலிபான்கள் தெரிவித்தனர். ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என ஆப்கன் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் பஞ்ஷிரில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகின்றனர். ஏற்கெனவே அங்கிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வரும் சூழலில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அங்குள்ள மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT