Published : 04 Sep 2021 02:54 PM
Last Updated : 04 Sep 2021 02:54 PM

எலெக்ட்ரிக் ஏர் டேக்ஸி: எதிர்கால வாகன பரிசோதனையை தொடங்கியது நாசா

எலெக்ட்ரிக் ஏர் டேக்ஸி எனப்படும் எதிர்கால வாகனத்தை அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் பரிசோதனை செய்து வருகிறது.

புவிவெப்பமயமாதலும் அதன் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றங்களும் உலகளவில் பெரும் சவாலாக இருக்கின்றன. இதனால், உலக நாடுகள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இந்தியாவில் இஸ்கூட்டர் விழிப்புணர்வும் விற்பனையும் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸியை சோதனையை தொடங்கியிருக்கிறது. நாசா தனது அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டின் ஒரு பகுதியாக தேசிய ஆட்வான்ஸ்ட் ஏர் மொபிலிட்டி திட்டத்தை Advanced Air Mobility (AAM) மேற்கொண்டுள்ளது. அத்திட்டத்தின் கீழ் தான் ஏர் டேக்ஸி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த வாகனத்துக்கு eVTOL என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரத்யேக விமானத் தளத்தில் நாசா பரிசோதனை செய்துள்ளது.

முதலில் சேஃப் டேக் ஆஃப், சேஃப் லேண்டிங் என்ப்படும் விமானத்தை மேலெழுப்புதல் மற்றும் தரையிறக்குதல் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்தக் கட்டங்கள் பரிசோதனையும் வெற்றி பெற்றால் eVTOL எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மக்களுக்கான பொதுப் போக்குவரத்தாக இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும், சரக்குகளைக் கொண்டு சேர்ப்பதற்கும் இந்த இ டேக்ஸியை பயன்படுத்தலாம் என திட்டமிடப்படுகிறது.

நாசாவின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வாகனத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திட்ட மேலாளர் டேவிஸ் ஹேக்கன்பெர்க் கூறியுள்ளார்.

முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பேக்கேஜ் டெலிவரி, ஏர் டேக்ஸி, மருத்துவ ஆம்புலன்ஸ் எனப் பல்வேறு வகையிலும் இதைப் பயன்படுத்தலாம் என நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எலெக்ட்ரிக் ஏர் டேக்ஸி போன்ற வாகனத்தைப் பரிசோதனை செய்வது நாசாவுக்கு முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x