Published : 03 Sep 2021 10:06 PM
Last Updated : 03 Sep 2021 10:06 PM
தலிபான்கள் நாகரிகமாக நடந்துகொண்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் கடந்த 15 ஆம் தேதி முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
அமெரிக்கப் படைகளும் கடந்த 31 ஆம் தேதி ஆப்கனில் இருந்து வெளியேறிவிட்டது. இந்நிலையில், அங்கு முறைப்படி அரசமைக்க தலிபான்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில் அதிபர் புதின் இன்று கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசினார். அப்போது
அவர் கூறியதாவது:
ஆப்கானிஸ்தான் உடைவதை ரஷ்யா விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானுடன் உலக நாடுகள் ராஜாங்க ரீதியாக உறவை நீட்டிக்க வேண்டும் என தலிபான்கள் விரும்பினால் முதலில் அவர்கள் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும். பன்படுத்தப்பட்ட சமூகமாக அவர்கள் மாற வேண்டும். எப்போது வேண்டுமானால் எளிதில் தொடர்பு கொள்ளலாம், எளிதில் பேசலாம், சமரசம் செய்யலாம் என்ற நிலையை அவர்கள் எட்ட வேண்டும். யாரிடமிருந்தும் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியது குறித்து பேசுகையில், "ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியது மிகப்பெரிய பேரழிவை விளைவித்துள்ளது.
அமெரிக்கர்கள் திட்டமிட்டு செயல்படக் கூடியவர்கள். 20 ஆண்டுகளாக 1.5 ட்ரில்லியன் டாலர் ஆப்கனில் செலவழித்துள்ளனர். ஆனால், அதற்கான விடை பூஜ்ஜியமாக உள்ளது. ஆப்கனில் 20 ஆண்டுகளாக அமெரிக்காவுடனும், மேற்கத்தியப் படைகளுடனும் இணைந்து செயல்பட்டவர்களின் கதி இப்போது இன்னுமொரு பேரழிவாக உருவெடுத்துள்ளது " என்றார்.
தலிபான்கள் முதலில் அமெரிக்காவுடனும் பேச்சுவார்த்தை நடத்துங்கள். உங்களுடன் 20 ஆண்டுகளாக போரில் இருந்தவர்கள் அவர்கள் தான். அவர்களுடனான உங்கள் நிலைப்பாட்டை இறுதி செய்துவிட்டு அடுத்ததாக சீனா, ரஷ்யாவை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்பதை இறுதி செய்யுங்கள் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT