Published : 31 Aug 2021 09:13 AM
Last Updated : 31 Aug 2021 09:13 AM
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஆப்கனுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டது என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க, நேட்டோ படைகள் நடத்தி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மெரிக்க படைகள் முழுமையாக வெளிேயறத் தொடங்கியதையடுத்து, தலிபன்கள், பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றி, முழுமையாக தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக நடந்த மீட்புத் தி்ட்டத்தில் ஆயிரக்கணக்கான அமெரிக்க மக்கள், வெளிநாட்டவர்கள், ஆப்கன் மக்கள் ஏராளமானோர் வெளியேறினர். கொடூரமான தலிபான்கள் ஆட்சிக்கு அஞ்சி ஆப்கனிஸ்தான் மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே இடம் பெயர்வைத் தொடங்கினர்.
இந்நிலையில் ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் வெளியேற வேண்டும் என்பதால், அந்தக் காலக்கெடு முடிவதற்கு முன்பே, அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம், காபூல் ஹமீது கர்சாய் விமானநிலையத்திலிருந்து இன்று வெளிேயறியது.
ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி செய்தார். இதையடுத்து, ஆப்கனுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
தலிபான்கள் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லாஹ் முஜாஹித் கூறுகையில் “ ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக காபூலிலிருந்து வெளியேறிவிட்டன. ஆப்கனுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
காபூல் சர்வதேச விமானநிலையத்தில் இருந்த தலிபான் வீரர் ஹேமந்த் ஷெர்சாத் கூறுகையில் “ காபூலில் இருந்து அமெரிக்காவின் கடைசி 5 விமானங்களும் வெளியேறிவிட்டன. என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. 20 ஆண்டுகள் தியாகத்துக்கு பலன் கிடைத்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஜல்மே கலில்ஜாத் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஆப்கானிஸ்தானுடன் எங்களின் 20 ஆண்டு போர் முடிந்தது. எங்களின் வீரமிக்க வீரர்கள், கப்பற்படை வீரர்கள், விமானப்படை வீரர்கள், தரைப்படையினர் செய்த தியாகம் முடிவுக்கு வந்தது. அனைவருக்கும் மரியாதையுடன் நன்றி தெரிவிக்கிறோம்.
இனிமேல் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கரங்களுக்குச் சென்றுவிட்டது. அவர்களின் பாதையை, இறையான்மையை அவர்கள் முடிவு செய்வார்கள். அவர்கள் நடத்திய போரையும் முடிக்கவும் இது நல்ல வாய்ப்பு. தேசத்தை தலிபான்கள் நடத்த வேண்டும் என்பதால் மிகப்பெரிய சோதனை காத்திருக்கிறது.
தலிபான்கள் தேசத்தை பாதுகாப்பாக, வழிநடத்துவார்களா மக்களை பாதுகாப்பார்களா , நல்ல எதிர்காலத்தை தேசத்துக்கு வழங்குவார்களா என்பது தெரிந்துவிடும். அழகு, சக்தி, பல்வேறு கலாச்சார்கள், வரலாற்றுப்புகழ் ,பாரம்பரியத்தை கொண்டதேசமாக உலகிற்கு ெவளிப்படுத்த முடியுமா? “எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT