Published : 16 Aug 2021 03:20 AM
Last Updated : 16 Aug 2021 03:20 AM
லெபனான் நாட்டில் எரிபொருள் டேங்கர் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
லெபனானின் வடக்கு பிராந்தியமான அக்காரில் ராணுவம், பெட்ரோல் டேங்கரை பறிமுதல் செய்து வைத்திருந்தது. இந்நிலையில் நேற்று அந்த எரிபொருள் டேங்கர் திடீரென வெடித்துச் சிதறிதீப்பிடித்தது. இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 79 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அக்கார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரவில் பெட்ரோல் நிரப்புவதற்காக டேங்கரைச் சுற்றி திரண்டிருந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும், இந்தமோதலுக்கு முன்பாக ராணுவம் அந்தப் பகுதியை விட்டு வெளியேறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி, கடுமையான எரிபொருள் பற்றாக்குறை, நீண்டநேர மின்வெட்டு போன்றவற்றால் லெபனான் நாடுதத்தளித்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு அசம்பாவித சம்பவம் அங்கு நடந்துள்ளது.
இதுகுறித்து அக்கார் மருத்துவமனை ஊழியர் யாசினி மெட்லெஜ் கூறும்போது, “எரிபொருள் டேங்கர் வெடித்ததில் ஏராளமானோர் உடல்கருகி இறந்துள்ளனர். இங்கு கொண்டுவரப்பட்ட உடல்களைஅடையாளம் காண முடிய வில்லை. ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT