Published : 15 Aug 2021 06:18 PM
Last Updated : 15 Aug 2021 06:18 PM

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தனர் தலிபான்கள்: பதவி விலகுகிறார் அதிபர் அஷ்ரப் கனி

ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகுவதாகவும், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஆப்கன் தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்ததை ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது.

ஆப்கன் அதிபர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட ட்வீட்டில், காபூலின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது. இருப்பினும், பாதுகாப்புப் படையினருடன் சர்வதேச படைகளும் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால் நகருக்குள் அச்சுறுத்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் தான் ஆப்கானிஸ்தானின் காபூல் நகர் மூன்று மாதங்களுக்கு தாக்குப் பிடிக்கும் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்திருந்தது. இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள்ளும் தலிபான்கள் வந்துவிட்டனர். அமெரிக்க உளவுத் துறை கணிப்புக்கே சவால் கொடுக்கும் வகையில் தலிபான்கள் முன்னேறியுள்ளனர்.

காபூலைக் கைப்பற்றியது குறித்து தலிபானைச் சேர்ந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், எங்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் நோக்கமில்லை என்று கூறினார்.

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில், காபூலை அமைதியான முறையில் ஒப்படைக்கும்படி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமைதியான வழியில் அதிகார மாற்றம் ஏற்படும் வரை காபூல் நுழைவாயில்கள் காத்திக்க தலிபான்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளாது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி பதவி விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

126 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம்:

126 பயனிகளுடன் AI-244 ஏர் இந்தியா விமானம் காபூலில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம் இன்றிரவு தலைநகர் டெல்லிக்கு வரும் எனத் தெரிகிறது. இதுதான் காபூலில் இருந்து பயணிக்கும் கடைசி ஏர் இந்தியா விமானம் என்றும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு பல்வேறு நாடுகளும் தங்களின் விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டு மக்கள் தூதுரக அதிகாரிகள் எனப் பலரையும் பாதுகாப்பாக அழைத்துவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தலிபான்கள் ஆட்சி அமைந்துவிட்டால் வேற்று நாட்டவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என்ற எச்சரிக்கை இருப்பதால் பல்வேறு நாடுகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x