Published : 07 Aug 2021 06:05 PM
Last Updated : 07 Aug 2021 06:05 PM
மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகப் பதிவு செய்யப்படும் கரோனா தொற்றுகளில் 80%க்கும் மேல் டெல்டா வைரஸால் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தடுப்பூசி காரணமாக அதிகமான நபர்கள் மருத்துவமனைகளில் வந்து அனுமதிக்கப்படுவது குறைந்துள்ளது.
அமெரிக்காவின் சில இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேகம் குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தினால், விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பும் என அமெரிக்க அரசு எதிர்பார்த்தது. ஆனால், அங்கு டெல்டா வகை வைரஸ் தீவிரமாக பரவி அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
இந்தநிலையில் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளதாக என அமெரிக்க தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபரின் குழுவின் கரோனா தடுப்பு நடவடிக்கை குழு இயக்குநர் சைரஸ் ஷாபார் கூறியதாவது:
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், பழமைவாதிகள் அதிகம் வாழும் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தடுப்பூசி விநியோகம் ஏப்ரல் மாதம் சற்று குறைந்தது.
18 வயதுக்கு மேற்பட்டோரில் 50 சதவீத அமெரிக்கர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கு கடந்த மே மாதம் எட்டப்பட்டது.
50 சதவீத அமெரிக்க மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இரண்டு தவணை மாடர்னா அல்லது பைசர் தடுப்பூசிகள் அல்லது ஒரு தவணை ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசிகளை 16.5 கோடி அமெரிக்கர்கள் செலுத்தியுள்ளனர். இதை நாம் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT