Published : 06 Feb 2016 10:32 AM
Last Updated : 06 Feb 2016 10:32 AM
அமெரிக்க அதிபர் தேர்தலை யொட்டி ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் போட்டியாளர்கள் ஹிலாரி கிளிண்டன், பெர்னி சாண் டர்ஸ் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்றனர்.
இந்த விவாத மேடையில் பொரு ளாதாரம், வெளியுறவு கொள்கை தொடர்பாக இரு தலைவர்களும் தத்தம் கருத்துகளை வெளி யிட்டனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் லோவாவில் அண்மையில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் உட்கட்சித் தேர்தலில் முன்னாள் வெளி யுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 50 சதவீத வாக்குகள் 22 பிரதிநிதித்துவ வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். அவரைத் தொடர்ந்து வெர்மாண்ட் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் 50 சதவீத வாக் குகள் 21 பிரதிநிதித்துவ வாக்கு களுடன் 2-ம் இடம் பிடித்தார்.
சாண்டர்ஸ் விமர்சனம்
இதைத் தொடர்ந்து நியூ ஹேம்ஷையர் மாகாண தொலைக் காட்சி நிகழ்ச்சியில் ஹிலாரியும் பெர்னி சாண்டர்ஸும் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெர்னி சாண்டர்ஸ் கூறியதாவது: அமெரிக்காவின் அதிகார வர்க்க பிரதிநிதியாக ஹிலாரி விளங்குகிறார். நான் சமானிய மக்களின் பிரதிநிதியாக நிற்கிறேன். இராக் போருக்கு ஆதரவு அளித்தவர்களில் ஹிலாரி யும் ஒருவர். ஆனால் அவர் இப்போது இராக், சிரியாவுக்கு படைகளை அனுப்பக் கூடாது என்று கூறுகிறார். அவரது வெளியுறவு கொள்கையில் தெளிவு இல்லை. அவரது பொருளாதார கொள்கைகளும் குளறுபடியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஹிலாரி வாக்குறுதிகள்
ஹிலாரி கிளிண்டன் பேசிய தாவது: சாண்டர்ஸ் முன்வைத் துள்ள ‘யூனிவர்சல் ஹெல்த் கேர்’ சுகாதார திட்டம் நடைமுறை சாத்தியமற்றது. அவரைப் போல வானத்தை வில்லாக வளைப்பேன் என்று நான் வாக்குறுதி அளிக்க மாட்டேன்.
என்னால் எது முடியுமோ அதை மட்டுமே கூறுவேன். அதன்படி வளர்ச்சிக்கான உண்மையான திட்டங்களை மக்களிடம் அறிவித்துள்ளேன். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்தி, குறைந்த செலவில் மருத்துவ வசதி, ஊதியத்துடன்கூடிய விடுமுறை உள்ளிட்டவையே எனது பிரதான லட்சியங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர்களில் ஹிலாரிக்கும் சாண்டர்ஸுக்கும் இடையே கடும் போட்டி இருக்கக்கூடும் என்று அமெரிக்க அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT