Published : 23 Feb 2016 10:21 AM
Last Updated : 23 Feb 2016 10:21 AM
சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 150-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந் துள்ளனர்.
தெற்கு டமாஸ்கஸ் பகுதி மற்றும் ஹோம்ஸ் பகுதிகளில் ஐ.எஸ். தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் நேற்றுமுன்தினம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். மத்திய ஹோம்ஸ் நகரின் பிரதான பகுதியில் 2 கார் குண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 57 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர்.
இதைத் தொடர்ந்து தெற்கு டமாஸ்கஸ் பகுதியில் 4 இடங் களில் தொடர்ச்சியாக தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் வெடித்துச் சிதறினர். இதில் 87 பேர் உயிரிழந் தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஒட்டுமொத்தமாக 150 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந் திருப்பதாகவும் ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷியா முஸ்லிம்கள் பெரும்பான் மையாக வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளன. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சிரியா அதிபர் ஆசாத் எச்சரித்துள்ளார்.
சண்டை நிறுத்தம் எப்போது?
சிரியாவில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்காவும் ரஷ்யாவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
சிரியா அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்து வருகின்றன. இரு தரப்பினரிடையே சண்டை நிறுத்தம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் ஐ.எஸ். தீவிரவாதி களுக்கு எதிரான தாக்குதல் தொடரும் என்று சர்வதேச நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன. இந்தப் பின்னணியில் தலைநகர் டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதிகளை குறிவைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்தியுள் ளனர்.
இதனிடையே ஐ.எஸ். தீவிரவாத முகாம்கள் மீது ரஷ்ய போர் விமானங்கள் நேற்றுமுன்தினம் இரவு நடத்திய தாக்குதலில் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல அமெரிக்க கூட்டுப் படைகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT