Published : 03 Jul 2021 10:03 PM
Last Updated : 03 Jul 2021 10:03 PM
கரோனா வைரஸினால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக மலேசியாவில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன.
கடந்த ஒருவருடமாக கரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக பொருளாதார சரிவு மற்றும் வேலையின்மையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மலேசியாவில் சமீப மாதங்களில் கரோனாவினால் ஏற்பட்ட மன நெருக்கடி காரணமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மலேசிய தன்னார்வ அமைப்பு வெளியிட்ட தகவலில், “ கரோனா ஏற்பட்ட இழப்புகள் மட்டுமல்லாது மலேசியாவில் தற்கொலைகளும் அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 468 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2019 ஆம் ஆண்டில் மலேசியாவில் 609 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில் 63 பேர் தற்கொலை செய்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலைகள் அதிகரித்து வருவதால் மக்களின் மன நலத்தைக் காக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மலேசியா மட்டுமல்லாது ஜப்பானிலும், தென்கொரியாவிலும் இவ்வாண்டு தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT