Published : 02 Jul 2021 12:09 PM
Last Updated : 02 Jul 2021 12:09 PM
கனடா நாட்டில் இதுவரை இல்லாத வகையில் வெப்ப நிலை அதிகரித்து அனல் காற்று வீசி வருகிறது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ கனடாவில் கடந்த சில நாட்களாகவே அனல் காற்று வீசி வருகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வாரம் 45 டிகிரி செல்சியஸாக பதிவான வெப்ப நிலை தற்போது 49 டிகிரி செல்ஸியாகி உள்ளது. வான்கூவர் நகரப் பகுதியிலும் கடும் வெப்பம் நிலவுகிறது.
இந்த அனல் காற்றுக்கு இதுவரை கனடாவில் 70க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கடுமையான வெப்பம் காரணமாக மக்கள் கடற்கரை பகுதிகளை நோக்கி படையெடுத்து சென்றுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக மயமாக்கல் விளைவாக பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அதிகப்படியான வெயில், மழை வெள்ளம், சூறாவளி போன்றவற்றை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.
முன்னதாக, , அன்டார்டிக்காவின் வடக்கே இருந்த மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் உடைந்து நொறுங்கியது. இது பிரான்ஸின் பாரீஸ் நகரை விட ஒன்றரை மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸை எட்டினால் அன்டார்டிக்காவில் உள்ள மூன்றில் ஒரு பகுதிபனிப்பாறைகள் உடைந்துவிடும் என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பூமியின் வெப்பநிலை 1.02 டிகிரி செல்சியஸாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT