Published : 24 Jun 2021 03:02 PM
Last Updated : 24 Jun 2021 03:02 PM

உருமாறிய டெல்டா வைரஸ்களை ஸ்புட்னிக் V தடுப்பூசி சிறப்பாக எதிர்கொள்ளும்: ரஷ்யா

கரோனா வைரஸ் ஆல்ஃபா, காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாறிவரும் நிலையில், அனைத்து வகையான உருமாறிய கரோனா வைரஸ்களையும் ஸ்புட்னிக் V தடுப்பூசி எதிர்கொள்ளும் என அதனைத் தயாரித்த ரஷ்யாவின் தி காமாலேயா ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் இன்ஸ்டிட்டியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இதைத்தவிர்த்து, ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை ரூ.1145 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்புட்னிக் தடுப்பூசி குறித்து ரஷ்யாவின் தி காமாலேயா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அலெக்ஸாண்டர் கிண்ட்ஸ்பர்க், ஸ்புட்னிக் V தடுப்பூசியை இரண்டு டோஸ்கள் எடுத்துக் கொண்ட பின்னர் உருவாகும் ஆன்டிபாடிக்கள் ஆல்ஃபா வேரியன்ட் முதல் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் டெல்டா வேரியன்ட் வரை அனைத்து வகையான உருமாறிய கரோனா வைரஸ்களையும் திறம்பட எதிர்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 40க்கும் மேற்பட்டோருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கரோனா மூன்றாவது அலையிலிருந்து தப்பிக்க அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு வேகமாக செயல்படுத்தி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x