Published : 20 Jun 2021 03:25 PM
Last Updated : 20 Jun 2021 03:25 PM

பிரேசிலில் கரோனா பலி 5 லட்சம்; அரசு நடத்திய இனப்படுகொலை  எனக் கூறி மக்கள் போராட்டம்

ரியோ டி ஜெனிரோ

பிரேசிலில் கரோனா தொற்றுநோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில் அதிபருக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது.

உலகஅளவில் கரோனோ தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரேசிலும் ஒன்றாகும். அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக பிரேசில் கோவிட் தொற்றுநோய் மரணங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ தொடக்கம் முதலேயே கரோனாவால் பாதிப்பு ஏற்படாது எனவும், அது பெருந்தொற்று அல்ல எனவும் பேசி வருகிறார். முகக்கவசம், தனிமைப்படுத்துதல் தேவையில்லாத ஒன்று என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா பகிரங்கமாகத் தெரிவித்தார்.

இதன் காரணமாக மருத்துவ நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பிரேசிலில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொது வெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்தார்.

போல்சனோரா


போல்சனோராவுக்கு முகக்கசவம் அணியாததற்காக அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தநிலையில் அந்நாட்டில் கோவிட் மரணங்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை பைசர் நிறுவனம் தடுப்பூசிகளை விற்பதற்கு அரசை அணுகியதாகவும் ஆனால் அதிபர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
பிரேசிலில் இதுவரை 1.7 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,00,000 பேர் பலியாகி உள்ளனர்.

இதனையடுத்து தலைநகர் பிரேசிலியா உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. அதிபர் போல்சனரோவை பதவி நீக்கக்கோரி டிரம்ஸ் இசைத்து, கோஷங்கள் எழுப்பினர். 5 லட்சம் கோவிட் மரணங்கள் என்பது மக்கள் மீது அரசாங்கம் நடத்திய இனப்படுகொலையின் ஒரு வடிவம் என கூறி போராட்டம் செய்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x