Published : 11 Dec 2015 05:19 PM
Last Updated : 11 Dec 2015 05:19 PM
‘எல் நினோ’ பருவநிலை மாற்றம் காரணமாக தென்னிந்தியாவில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்துள்ளது, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை மழை நீடிக்கலாம் என்று ஐ.நா. சபை ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எல் நினோ’ என்பது பூமியின் வெப்பநிலை ஏற்றத்தாழ்வை குறிப் பது ஆகும். உலகின் மிகப்பெரிய கடலான பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் நிலவும் வெப்ப நிலையின் ஏற்றத்தாழ்வை பொறுத்து எல் நினோவின் தாக்கம் கண்டறியப்படுகிறது. எல் நினோ ஏற்படும்போது ஒருபுறம் அதிக மழையும் மறுபுறம் கடும் வறட்சியும் நிலவும்.
பொதுவாக ஓராண்டுக்கு மட்டுமே எல் நினோவின் பாதிப்பு இருக்கும். ஆனால் கடந்த 1982-க் குப் பிறகு ஏற்பட்ட ‘எல் நினோக் கள்’ 3 ஆண்டுகள் முதல் 7 ஆண் டுகள் வரைகூட நீடித்துள்ளன.
தற்போது ‘எல் நினோ’ பருவ நிலை மாற்றம் காரணமாகவே தமிழகத்தில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது என்று ஐ.நா. சபை சுட்டிக் காட்டியுள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா. சபை யின் பொருளாதார, சமூக கமிஷன் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய, பசிபிக் பிராந்தி யத்தில் கடுமையான ‘எல் நினோ’ (2015-2016) பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்தியாவின் தெற்கு, மத்திய பகுதிகள், கம்போடியா, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி, பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதி, தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதிகள் பாதிக்கப்படலாம்.
குறிப்பாக தென்னிந்தியா, இலங்கை, மாலத்தீவில் சராசரியை விட கூடுதல் மழைப்பொழிவு இருக்கும். இந்த மழைப்பொழிவு 2015 டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்கக்கூடும்.
இதற்கு நேர்மாறாக பசிபிக் கடலில் பப்புவா நியூ கினியா, திமோர்-லெஸ்டி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் அதிகரித்து கடும் வறட்சி ஏற்படும்.
பாரீஸில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாறுபாடு குறித்த மாநாட்டில் ‘எல் நினோ’ பாதிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது. ‘எல் நினோ’ உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர் கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக் கைகள் அவசியம்.
முன்னெச்சரிக்கை அறிவிப்பு, கண்காணிப்பு, நிவாரண நடவடிக் கைகளில் ஆசிய, பசிபிக் பிராந்திய நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தலைநகர் சென்னை உட்பட மாநிலம் முழு வதும் சராசரியைவிட அதிக மழை பொழிந்துள்ளது. பொது வாக வடகிழக்குப் பருவமழை யின்போது சென்னையில் 79 செ.மீட்டர் மழைப் பொழிவு இருக் கும். இந்த ஆண்டு இதுவரை 158 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த டிசம்பர் 1-ம் தேதி அன்று 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் 49 செ.மீ. மழை கொட்டியது. டிசம்பர் 4-ம் தேதி 40 செ.மீ. மழை பெய்தது.
இதுதொடர்பாக பாரீஸ் பருவ நிலை மாறுபாடு மாநாட்டில் பேசிய பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லாரண்ட் பேபியஸ், பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே சென் னையில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது, இது உலக நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை மணி என்று கூறியது நினைவு கூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT