Published : 28 May 2021 05:44 PM
Last Updated : 28 May 2021 05:44 PM
சிரியாவின் அதிபராக பஷார் அல் ஆசாத் 4-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
சிரியாவில் கடந்த 26ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
இத்தேர்தலில் ஆசாத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சரும், சோசலிச யூனியனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான அப்துல்லா சலிம் போட்டியிட்டார். இந்த நிலையில் பஷார் அல் ஆசாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஷாரின் வெற்றி குறித்து சிரிய அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம், “சிரிய அதிபர் தேர்தலில் பஷார் அல் ஆசாத் 95.1% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்” என்று பதிவிட்டுள்ளது.
இந்த நிலையில் இத்தேர்தலை, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நியாயமற்ற முடிவுகள் என்று விமர்சித்துள்ளன.
போரினால் புலம்பெயர்ந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவித்த பிறகு சிரியர்கள் பலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிரியா போர்
ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சிரியா போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குற்றம் சுமத்தின.
இந்த நிலையில் பஷார் அல் ஆசாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
السوريون قالوا كلمتهم..
بشار الأسد يفوز بانتخابات رئاسة الجمهورية العربية السورية بعد حصوله على 13 مليوناً و540 ألفاً و860 صوتاً بنسبة 95.1 بالمئة من أصوات الناخبين داخل وخارج سورية.#سورية_انتخبت_رئيسها#انتخابات_رئاسة_الجمهورية_2021 pic.twitter.com/PbUPqMfalc— Syrian Presidency (@Presidency_Sy) May 27, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT