Published : 27 May 2021 09:38 AM
Last Updated : 27 May 2021 09:38 AM
பஞ்சாப் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன்பெற்று மோசடி செய்து தப்பிச் சென்ற தொழிலதிபர் மெகுல் சோக்ஸி, கரிபியன் தீவான ஆன்டிகுவா பர்படாஸிலிரு்து தப்பிச் சென்று டோமினிக்கா நாட்டில் பிடிபட்ட நிலையில், மெகுல் சோக்ஸியை ஏற்க மாட்டோம் எங்கள் நாட்டுக்கு அனுப்பாதீர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்துங்கள் என்று ஆன்டிகுவா பர்படாஸ் பிரதமர் கேஸ்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்டிகுவா மற்றும் பர்படாஸில் முதலீட்டுத் திட்டம் மூலம் குடியுரிமையை மெகுல் சோக்ஸி பெற்றார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து 2018ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரிபியன் தீவுக்கு மெகுல் சோக்ஸி குடும்பத்துடன் தப்பி அங்கு வாழ்ந்து வருகிறார் .
இந்நிலையில் கடந்த 23்ம்தேதி ஜாலி ஹார்பருக்கு சென்ற மெகுல் சோக்ஸியை காணவில்லை. இதையடுத்து கடந்த 4 நாட்களாக ஆன்டிகுவா பர்படாஸ் போலீஸார் அண்டை நாடுகளுக்கும், தீவுகளுக்கும் தகவல் அளித்து மெகுல் சோக்ஸியைத் தேடி வந்தனர, மெகுல் சோக்ஸி குறித்து இன்டர்போல் போலீஸார் மூலம் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆன்டிகுவா பர்படாஸ் தீவிலிருந்து தப்பித்த மெகுல் சோக்ஸி, படகு மூலம் கியூபா செல்லத் திட்டமிட்டுள்ளார். இதன்படி டோமினிக்கா நாட்டின் வடபகுதியான தலைநகர் ரோஸியில் உள்ள கேன்பீல்ட் கடற்கரையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டு அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது டோமினிக்கா நாட்டு போலீஸாரின் பாதுகாப்பில் இருக்கும் மெகுல் சோக்ஸியை இந்திாயவுக்கு அனுப்புவதா அல்லது பர்படாஸ் ஆன்டிகுவா தீவுக்கு அனுப்புவது குறித்து பேச்சு நடந்து வருகிறது.
இதுகுறித்து ஆன்டிகுவா பர்படாஸ் நாட்டின் பிரதமர் கேஸ்டன் பிரவுன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
“ எங்கள் நாட்டிலிருந்து தப்பிச் சென்ற மெகுல் சோக்ஸியை இனிமேல் ஏற்கமாட்டோம். டோமினிக்கா நாட்டுக்கு சட்டவிரோதமாக சென்று சோக்ஸி சிக்கியுள்ளார்,பெரும்பாலும் படகில் சென்றிருக்கவே வாய்ப்புள்ளது. டோமினிக்கா அரசு ஆன்டிகுவா மற்றும் இந்திய அரசுக்கு நன்கு ஒத்துழைக்கும்.
எங்கள் நாட்டுக்கு மெகுல்சோக்ஸியை மீண்டும் அனுப்பி வைக்க வேண்டாம் என்று டோமினிக்கா பிரதமர் கெரிட்டிடம் கேட்டுக்கொண்டோம். அதேசமயம், இந்திய அரசைத் தொடர்பு கொண்டு, மெகுல் சோக்ஸியை இந்தியா கொண்டு செல்லத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் கேட்டுக்கொண்டோம். டோமினிக்கா அரசும் இந்திய அரசுடன் தொடர்பில் இருந்து வருகிறது.
நிச்சயமாக மெகுல் சோக்ஸி டோமினிக்கா குடிமகன் இல்லை , அங்கு வாழ்வதற்கு எந்தவிதமான சட்டரீதியான பாதுகாப்பும் இல்லை. ஆதலால் டோமினிக்கா அரசு மெகுல் சோக்ஸியை நிச்சயம் நாடு கடத்தும்.
மெகுல் சோக்ஸியை நாடு கடத்த டோமினிக்கா அரசும் ஏற்றுக்கொண்டது, அவரை ஏற்கத் தயாராக இல்லை. டோமினிக்கா அரசும், போலீஸாரும் இந்திய அரசுடன் தொடர்பில் இருந்து விரைவில் அந்நாட்டுக்கு அனுப்பும் பணியில் ஈடுபடுவார்கள்.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த மெகுல் சோக்ஸியை கைது செய்யுங்கள் அவரை இந்தியாவுக்கு நேரடியாக நாடு கடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டோம்”
இவ்வாறு பிரவுன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT