Published : 23 May 2021 05:06 AM
Last Updated : 23 May 2021 05:06 AM

ஸ்புட்னிக் உற்பத்தி ஆகஸ்டில் தொடங்கும்: ரஷ்யாவுக்கான இந்திய தூதர் அறிவிப்பு

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்

கரோனா தடுப்பூசி மருந்தான ஸ்புட்னிக் உற்பத்தி இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பாலா வெங்கடேஷ் வர்மா தெரிவித்தார். இது தவிர தற்போது 2 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு ஏற்கெனவே 2.1 லட்சம் டோஸ் மருந்துகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மே மாத இறுதிக்குள் 30 லட்சம் டோஸ்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். ஜூன் மாதம் 50 லட்சம் குப்பிகள் அனுப்பப்படும் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் ஸ்புட்னிக் விநியோகம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். முதலாவதாக ரஷ்யாவிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்டு விநியோகிக்கப்படும். இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட் டுள்ளன.
மூலப்பொருள் அதிக அளவில் இந்தியாவுக்கு அனுப்பப்படும். இவை உடனடியாக பயன்படுத் தும் வகையிலானது. இவை இந்தியாவில் குப்பிகளில் அடைக்கப்பட்டு பின்னர் உபயோ கத்துக்கு அனுப்பப்படும்.

மூன்றாவது கட்டமாக ஸ்புட்னிக் மருந்து தயாரிக்கும் தொழில்நுட்பம் இந்திய நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு அந்நிறுவனம் இந்த மருந்தை உற்பத்தி செய்யும். மூன்று கட்ட நடவடிக்கையிலும் ஒட்டுமொத்தமாக 8.5 கோடி குப்பிகள் இந்தியாவுக்குக் கிடைக் கும் என்று அவர் கூறினார்.

`ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி மருந்துக்கும் இந்தியாவில் அனுமதி கிடைக்கும் என்று குறிப்பிட்டார். ரஷ்யாவில் லைட் மருந்தையும் பரிந்துரைத் துள்ளதாகவும், இந்தியாவில் இதற்கான அனுமதி இன்னும் முழுமையடையவில்லை என்றும் குறிப்பிட்டார்.
`ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி மருந்து 79.4 சதவீத நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாக உள்ளது. இது ஒரு முறை போட்டுக்கொண்டால் போதுமானது. இரண்டு முறை தடுப்பூசி போடுவதன் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்புத் திறனைவிட ஒரு முறை போடக்கூடிய `ஸ்புட்னிக் லைட்' மருந்து சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x