Published : 21 May 2021 01:13 PM
Last Updated : 21 May 2021 01:13 PM
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் மற்றும் இஸ்ரேல் ஆதரவாளர்கடையே மோதல் வெடித்தது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தின் அருகே இஸ்ரேல் ஆதரவாளர்கள் மற்றும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் வன்முறை வெடித்தது.
இதன் காரணமாக பலர் காயமடைந்தனர். இந்த நிலையில் மோதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று நியூயார்க் போலீஸார் தெரிவித்துள்ளனர்” செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதலை நடத்தின.
மே 10-ம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மற்றும் மேற்கு கரை பகுதியில் நடத்திய தாக்குதலில் 200-க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்றும், இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் போர் நிறுத்தத்தம் செய்யப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். .
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு உள்ளது என ஹமாஸ் அறிவித்து உள்ளது.இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவின் போர்நிறுத்த ஒப்பந்த முடிவை இஸ்ரேலிய அமைச்சரவையும் உறுதி செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT