Published : 20 May 2021 08:07 PM
Last Updated : 20 May 2021 08:07 PM
கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குனர் ஹன்ஸ் கூறும்போது, “நாம் தொடர்ந்து அச்சத்தில் உள்ளோம். நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எனவே, சர்வதேசப் பயணங்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
இந்தியாவில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் b.1.167 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் வேகமாகப் பரவக் கூடியது. இதுவரை இந்த வைரஸ் 53 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து உருமாற்றம் அடைந்த வைரஸ்களுக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.
இந்த நிலையில் கரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT