Published : 17 Dec 2015 08:42 PM
Last Updated : 17 Dec 2015 08:42 PM
தனது நாட்டுக்கு எதிரான உத்தரவை பிறப்பித்தால் அமெரிக்கா நினைத்துப் பார்க்க முடியாத மோசமான விளைவுகளை சந்தித்திக்க நேரிடும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வட கொரிய ஊடகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வட கொரியா மீது தேவையில்லாத தடைகளை கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பது அந்நாட்டுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் அந்த நாடு நினைத்துப் பார்க்க முடியாத மோசமான விளைவுகளை சந்தித்திக்க நேரிடும்" என்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது நாட்டின் இறையாண்மையை தக்கவைத்துக்கொள்ள அணுகுண்டுகளும் ஹைட்ரஜன் குண்டுகளும் வெடிக்க தயார் நிலையில் உள்ளதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து அந்த நாட்டின் சில கப்பல் நிறுவனங்கள் சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்தி வந்து அந்த நாட்டுக்கு அளிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக வடகொரியாவுக்கு தேவையான ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடகொரியாவில் உள்ள 2 வங்கிகள், 3 கப்பல் நிறுவனங்களுடன் அமெரிக்கர்களோ, அமெரிக்க நிறுவனங்களோ எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT