Published : 26 Apr 2021 11:28 AM
Last Updated : 26 Apr 2021 11:28 AM
இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசிகள் அனுப்புவது குறித்து ஆலோசித்து வருவதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பெரும்தொற்று ஆலோசகர் ஆண்டனி கூறும்போது, “ நாங்கள் இன்னமும் நிறைய செய்ய வேண்டும் என்று நினைகிறோம். நீங்கள் அதிலிருந்து நகர்ந்து செல்ல முடியாது என்று நினைகிறேன். அமெரிக்கவில் பயன்படுத்தப்படாத 3 கோடி ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசிகள் உள்ளன. இதனை இந்தியாவுக்கு அனுப்ப யோசித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்தியாவில், முன்னதாக, இந்தியாவில் கரோனா தொற்றால் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை அனுப்பி இந்தியர்களுக்கு உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இரண்டு வாரங்களாக கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. நேற்று மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டு மக்களை இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளன.
இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமானத்தை 30% ஆஸ்திரேலிய அரசு குறைத்துள்ளது. அமீரகம், கனடா போன்ற நாடுகளும் இந்திய விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.
உலகம் முழுவதும் கரோனாவுக்கு 14 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT