Published : 23 Apr 2021 02:37 PM
Last Updated : 23 Apr 2021 02:37 PM
இந்தியாவுக்கு ஆதரவாக #indianeedsoxigen என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் பாகிஸ்தான் நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.
உலக அளவில் இல்லாத அளவு இந்தியாவில் கரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
இந்த துன்பமயமான சூழலில் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்நாட்டு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பாகிஸ்தானால் முடிந்த உதவிகளை இந்தியாவுக்கு வழங்குமாறும் அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுகின்றனர்.
இதன் காரணமாக பாகிஸ்தானில் #indianeedsoxigen என்ற ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பாகிஸ்தானில் செயல்படும் அப்துல் சத்தார் தன்னார்வ அமைப்பு மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவுக்கு உதவ நாங்கள் தயார் என்று இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT