Published : 16 Apr 2021 07:16 PM
Last Updated : 16 Apr 2021 07:16 PM

பாகிஸ்தானிலிருந்து வெளியேறுங்கள்: தங்கள் நாட்டு மக்களுக்கு பிரான்ஸ் அரசு அறிவுறுத்தல்

பாகிஸ்தானில் நிலவும் வன்முறை காரணமாக பிரான்ஸ் நாட்டு மக்கள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானில் செயல்படும் பிரான்ஸ் தூதரகம் தரப்பில்,” வன்முறை காரணமாக பிரான்ஸ் குடிமக்களும், நிறுவனங்களும் உடனடியாக பாகிஸ்தானிலிருந்து தற்காலிமாக வெளியேற வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும் என்று பாகிஸ்தான் அரசு பிரான்ஸுக்கு உறுதி அளித்துள்ளது.

முன்னதாக, தெஹ்ரிக்-இ-லாபாயக் கட்சியின் தலைவர் சாத் ரிஸ்வி, முகமது நபியின் கார்ட்டூனை வெளியிட்டதற்கு எதிராக பிரெஞ்சு தூதரகத்தில் போராட்டத்தை முன்னெடுத்தார். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கைதை எதிர்த்து பாகிஸ்தானில் தெஹ்ரிக்-இ-லாபாயக் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக போலீஸார் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸார் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் போராட்டம் தினமும் தீவிரம் அடைவதைத் தொடர்ந்து அதனைத் தடுக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x