Published : 13 Apr 2021 06:10 PM
Last Updated : 13 Apr 2021 06:10 PM

கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் கரோனா தொற்றை 3 நிமிடங்களில் கண்டறியலாம்: ஜெர்மனி நிறுவனம் புதிய செயலி அறிமுகம்

கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் கரோனா தொற்றைக் கண்டறியலாம் என ஜெர்மனியின் செயல்படும் ஆப் டெவலப்பிங் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்களில் “கரோனா தொற்றை உறுதி செய்வதில் பிசிஆர் பரிசோதனைகளே பிரதானமாக இருக்கிறது.

இந்த நிலையில் கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் கரோனா தொற்றைக் கண்டறியும் புதிய முறையை ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் செயல்படும் நிறுவனம் ஒன்று பரிசோதனை செய்து வருகிறது. தாங்கள் கண்டறிதுள்ள செயலிக்கு Semic EyeScan என்று பெயரிட்டுள்ளனர்.

ஸ்மார்ட் போன் மூலம் கண்களைப் படம் எடுத்து இந்த செயலிக்கு அனுப்பினால் கண்ணில் உள்ள இளஞ்சிவப்பு அழற்சி அறிகுறி - மூலம் கரோனா தொற்றை உறுதி செய்து அது கூறுகிறது .

கண்களின் விழிப்படலத்தில் ஏற்படும் லட்சக்கணக்கான இளஞ்சிவப்புகளில் கரோனாவினால் ஏற்படும் இளஞ்சிவப்பை தனிமைப்படுத்திக் கண்டறிந்து தொற்றை உறுதி செய்ய தங்களால் முடிந்ததாக நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த செயலியின் முடிவுகள், 95% சரியாக உள்ளதாகவும், 3 நிமிடத்தில் கரோனா தொற்றைக் கண்டறிய முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 70,000 பேரிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்தச் செயலி மருந்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் இயக்குனர் குருபெர் கூறும்போது, “ எங்களின் செமிக் ஆர்ஹெப் நிறுவனம் இந்தச் செயலியை உருவாக்கி உள்ளது. நீங்கள் இந்த செயலியில் உங்கள் இரு கண்களை படமெடுத்து மதிபீட்டுக்கு அனுப்பினால் மதிப்பிடப்பட்ட முடிவை QR குறியீடாக சோதனை செய்யப்பட்ட நபரின் ஸ்மார்ட்போனில் சேமிக்க முடியும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x