Published : 04 Nov 2015 03:38 PM
Last Updated : 04 Nov 2015 03:38 PM
தெற்கு சூடான் தலைநகர் ஜுபாவில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே சரக்கு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகியுள்ளனர்.
பலியானோரில் குழந்தைகளும் அடங்குவர் என்று அசோசியேட் பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
ரஷ்ய தயாரிப்பான இந்த சரக்கு விமானம் நைலில் உள்ள பாலோச் எண்ணை வயல்களுக்குச் செல்வதாக இருந்தது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பழுது காரணமாக விழுந்து நொறுங்கியது.
அப்பர் நைல் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அங்கு கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளும் போர் புரிந்து வரும் பகுதியாகும் இது.
நைலின் கிழக்குப் பகுதியில் சில வீடுகள் இருக்கும் பகுதியில் புதர் மண்டிய இடத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடந்ததாக தெரிகிறது. பலியானோரில் சிலர் நிலத்திலும் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT