Published : 01 Nov 2015 10:50 AM
Last Updated : 01 Nov 2015 10:50 AM
சீனாவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் 17 பேர் இறந்தனர்.
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணம், உயாங் கவுன்ட்டியில் 1990-களில் கட்டப்பட்ட 2 மாடி கட்டிடம் ஒன்றை புதுப்பித்து கூடுதல் தளங்கள் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அக்கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் காயமுற்ற 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சீனாவின் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில் அடிப்படை கட்டுமானத் திட்டப் பணிகள் அதிகரித்துள்ளன. ஆனால் பாதுகாப்பு விதிமுறைகள் கண்டிப்புடன் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. அதிகார வர்க்கத்தில் ஊழல் மலிந்து வருவது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT