Published : 13 Nov 2015 11:20 AM
Last Updated : 13 Nov 2015 11:20 AM
இந்தியாவில், சிறுபான்மையினர், எழுத்தாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சூழல் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியிடம், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பேச வேண்டும் என எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சுமார் 200 எழுத்தாளர்கள் கையொப்பமிட்ட கடிதம் கேமரூ னுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த எழுத்தாளர்கள் சங்கமான பென் இன்டர்நேஷனல் சார்பில் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவில் சிறுபான் மையினர் மற்றும் கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது. எனவே, கருத்து சுதந்திரம், எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும்படி மோடியிடம் பிரிட்டன் வலியுறுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
ஹரி குன்ஸ்ரு, மெக் இவான் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.
மோடி பிரிட்டனில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள் ளார். இந்திய சமூகத்தினர் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT