Last Updated : 03 Nov, 2015 10:17 AM

 

Published : 03 Nov 2015 10:17 AM
Last Updated : 03 Nov 2015 10:17 AM

துருக்கி நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி

துருக்கி நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் நீதி, மேம்பாட்டு கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் எர்டோகன் மீண்டும் அதிபராக பதவியேற்கிறார்.

மொத்தம் 550 உறுப்பினர்கள் கொண்ட துருக்கி நாடாளுமன்றத்து க்கு கடந்த ஜூனில் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதிபர் எர்டோகன் கூட்டணி அரசை அமைக்க முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்நிலையில் 5 மாத இடைவெளியில் அங்கு நேற்று மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஆளும் நீதி, மேம்பாட்டு கட்சி 316 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. தனித்து ஆட்சி அமைக்க 276 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் ஆளும் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி யுள்ளது.

முக்கிய எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சிக்கு 134 இடங்கள் கிடைத்துள்ளன. மக்கள் ஜனநாயக கட்சி 56, தேசிய இயக்கம் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x