Published : 11 Mar 2021 07:18 PM
Last Updated : 11 Mar 2021 07:18 PM
போலியான சலுகைகளை வழங்கிக் கொண்டிருந்த சுமார் 184 சீன இணையதளங்களுக்கு சவுதி அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சவுதி உள்ளூர் ஊடகங்கள் தரப்பில், “மோசமான மற்றும் போலியான சலுகைகளைக் கொண்டிருந்த சுமார் 184 சீன இணையதளங்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.
இம்மாதிரியான வணிக நோக்க இணையதளங்கள் ஒழுங்குமுறை அதிகாரிகளைத் தவறாக வழிநடத்துகிறது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை சவுதி அரசு எடுத்துள்ளது” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
உலக அளவில் சமீப காலங்களில் வலிமையான பொருளாதார நாடாக விளங்கிவருகிறது சீனா. இந்தியா உட்பட பல உலக நாடுகள் சீனாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதையைப் பார்த்து வியந்து அதை பின்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
உள்நாட்டு சந்தையை ஸ்திரப்படுத்தும் வகையிலும், முதலீடுகளைத் தொடர்ந்து தக்கவைக்கும் வகையிலும் சீன அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவும், சவுதியும் சீனாவின் வர்த்தக வளர்ச்சிக்கு அடிக்கடி நெருக்கடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT