Published : 13 Feb 2021 04:25 PM
Last Updated : 13 Feb 2021 04:25 PM
சிரியt அரசின் கோரிக்கையை ஏற்று சுமார் 2,000 மெட்ரிக் டன் மதிப்புள்ள அரிசி மூட்டைகள் பரிசாக அனுப்பட்டது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ உணவு பாதுகாப்புகாக சிரியா அரசின் கோரிக்கையை ஏற்று அவசர உதவிக்காக சுமார் 2,000 மெட்ரிக் டன் அரிசி முட்டைகளை இந்தியா பரிசாக அனுப்பியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Govt. of India’s humanitarian assistance of 2000 MT rice as Gift for People & Govt of Syria arrives in Latakia. Amb Hifzur Rahman presents the gift to Syrian Minister of Local Admin, Head of Supreme Relief Com. Eng Makhlouf@DrSJaishankar @MEAIndia @SecySanjay @IndianDiplomacy pic.twitter.com/ivoUnjSXsN
— India in Damascus (@eoidamascus) February 11, 2021
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.
ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியா போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT