Published : 10 Feb 2021 06:20 PM
Last Updated : 10 Feb 2021 06:20 PM

அணு ஆயுத சோதனைகளுக்காக 300 மில்லியன் டாலர் கிரிப்டோ கரன்சியை திருடிய வடகொரியா: ஐ.நா. புகார்

அணு ஆயுத ஏவுகணை திட்டங்களுக்காக வடகொரியா சைபர் க்ரைம் தாக்குதல் மூலம் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை திருடியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில்,” தடை செய்யப்பட்ட அணு ஆயுத ஏவுகணை திட்டங்களுக்காக வடகொரியா சைபர் க்ரை தாக்குதல் மூலம் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை வடகொரியா திருடியுள்ளது.

2019 முதல் நவம்பர் 2020 வரை வடகொரியா திருடிய சொத்துக்களின் மதிப்பு 316.4 மில்லியன் டாலர் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி என்பது மெய்நிகர் பணம். பெரிய பணக்காரர்களும் முதலீட்டாளர்களும் சர்வதேச அளவில் இதை தற்போது உலகப் பொதுச் செலாவணியாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் மதிப்பை சர்வதேசச் சந்தை நிர்ணயிக்கிறது. இதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் தடை விதித்துள்ளன.

வடகொரியாவும், அணுஆயுத சோதனைகளும்

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 2017 ஆம் ஆண்டில் 22 ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன. இதனைத் தொடர்ந்து அணு ஆயுதச் சோதனை தொடர்பான உடன்படிக்கைகளை மீறுவதாக வடகொரியா மீது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை 2017 ஆம் ஆண்டில் பொருளாதாரத் தடை விதித்தது.

வடகொரியா அடிக்கடி ஏவுகணைச் சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் அந்நாட்டின் மீது ஐ.நா. பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்திருக்கிறது.

அமெரிக்காவும் அவ்வப்போது வடகொரியாவுக்கு எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x