Published : 10 Feb 2021 12:11 PM
Last Updated : 10 Feb 2021 12:11 PM
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் 7 மாத கால விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபி அமீரகத்திற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோம் விண்கலம் திட்டம் முகமத் பின் ராஷித் விண்வெளி மையம் தலைமையில் 2016ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. 7 மாதத்துக்கு முன்னர், விண்கலம் பூமியில் இருந்து மணிக்கு 39 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் விண்ணில் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு தற்போது செவ்வாய் கிரகத்தை ஹோப் விண்கலம் அடைந்துள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய ஐந்தாவது நாடு ஐக்கிய அரபு அமீரகம் ஆகும்.
இதுகுறித்து முகமத் பின் ராஷித் விண்வெளி மையத்தின் இயக்குனர் ஒம்ரான் ஷராஃப் கூறும்போது, “செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் ஹோம் விண்கலத்தை நிறுத்துவது என்பது மிகவும் முக்கியமானது. தற்போது நாங்கள் எங்கள் அறிவியல் சுற்றுப்பாதையில் மாறுவதற்கும், அறிவியல் தரவு சேகரிப்பைத் தொடங்குவதற்கும் தயாராகி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீகரத்தின் தொழில்நுட்ப அமைச்சர் சாரா கூறும்போது, “நாங்கள் செவ்வாய் கிரகத்தை அடைந்துவிட்டோம். 7 வருடத்திற்குப் பிறகு எனது தோளில் வைக்கப்பட்ட சுமையை இறக்கி வைத்திருப்பதுபோல் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீகரத்தின் சாதனையை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு நாடுகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT