Published : 31 Oct 2015 08:22 AM
Last Updated : 31 Oct 2015 08:22 AM
சவுதி அரேபியாவில் இஸ்லாமி யத்தை பழித்ததாக தண்டனை பெற்ற வலைப்பூ பதிவர், சிறப்பு வாய்ந்த ஐரோப்பிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை மன்னித்து விடுவிக்க ஆயி ரக்கணக்கானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ராய்ப் படாவி (31). இவர் வலைப்பூவில் (பிளாக்) கருத்து சுதந்திரம் வேண்டி பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். அதில் இஸ்லாமியத்தை பழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து படாவியை கடந்த 2012-ம் ஆண்டு போலீஸார் கைது செய்தனர். அவர் மீது சைபர்கிரைம் சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. வழக்கில் படாவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1000 கசையடி வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் ஆண்டு தோறும் வழங்கப்படும் 'சக்ஹா ரோவ் மனித உரிமைகள்’ விருதுக்கு படாவி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதை ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்ட்டின் சுல்ஸ் அறிவித்தார். பின்னர் அவர் கூறும்போது, “படாவியை விடுதலை செய்ய சவுதி மன்னர் சல்மான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை கொடூரமான சித்ரவதை” என்று தெரிவித்துள்ளர்.
படாவியை விடுவிக்க வேண் டும் என்று வலைப்பூக்களில் ஆயி ரக்கணக்கானோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT