Published : 19 Jan 2021 07:03 AM
Last Updated : 19 Jan 2021 07:03 AM
சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமில் கரோனா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஐஸ்கிரீம் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு பணியாற்றிய 1,600 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோ தனை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2019 இறுதியில் சீனா வின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நகரில் அமைந்துள்ள வைராலஜி ஆய்வகத்தில் இருந்து பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. இதை சீனா மறுத்து வருகிறது.
சீனாவில் இதுவரை 88,336 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 82,400 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,301 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4,635 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக சீன தலைநகர் பெய்ஜிங், டியான் ஜின், லியோனிங், ஹூபெய், ஷுஜியாஜுவாங் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஷுஜியாஜுவாங் பகுதியில் 1,000 அறைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது.
தொடக்கம் முதலே வைரஸ்
பரவிய விதம், வைரஸால் பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், உயிரிழந்தோர் தொடர்பான உண்மையான விவரங்களை சீனா மறைத்து வருவதாக புகார் கூறப்பட்டு வருகிறது. இந்த பின்னணியில் வெளிநாட்டில் இருந்தே சீனாவுக்கு கரோனா வைரஸ் பரவியதாக அந்த நாடு கூறி வருகிறது. இதற்கு ஆதார மாக தற்போது புதிய குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளது.
சீனாவின் டியான்ஜின் நக ரில் செயல்படும் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் மாதிரி களை சோதனை செய்தபோது அவற்றில் கரோனா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அந்த நிறுவனம் நியூசிலாந்து, உக்ரைன் நாடுகளில் இருந்து பால் பொடியை இறக்குமதி செய்கிறது. அந்த பால் பொடி யின் மூலமாகவே ஐஸ்கிரீமில் கரோனா வைரஸ் பரவி இருந்தது என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்த ஆலைக்கு சீல் வைக்கப் பட்டு, அங்கு பணியாற்றிய 1,600 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரி சோதனை செய்யப்பட்டுள்ளனர். ஆலையில் இருந்து விற் பனைக்கு அனுப்பப்பட்ட ஐஸ் கிரீம் பெட்டிகள் திரும்ப பெறப் பட்டுள்ளன. எனினும் சுமார் 65 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம்கள் விற்பனை செய் யப்பட்டுவிட்டன. ஒவ்வொரு பெட்டியிலும் 6 வகையான ஐஸ்கிரீம்கள் இருந்தன. அவற்றை யார் வாங்கினார்கள், ஐஸ்கிரீம் மூலம் யாருக்காவது கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
கடந்த நவம்பரில் இந்தியா, ரஷ்யா, அர்ஜென்டினா உட்பட 20 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன் வகைகளில் கரோனா வைரஸ் இருந்ததாக சீனா குற்றம்சாட்டியது. சில வாரங்களுக்கு முன்பு பிரேசில், பொலிவியா, நியூசிலாந்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாட்டிறைச்சியில் கரோனா வைரஸ் இருந்ததாகவும் புகார் கூறியுள்ளது.
கரோனா வைரஸ் தொடர்பான உண்மைகளை கண்டறிய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு சீனாவின் வூஹான் நகருக்கு
சென்றுள்ள நிலையில் சீன அரசு இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது குறிப் பிடத்தக்கது. இதனிடையே தனிமைப்படுத் தப்பட்டவர்களில் 3 பேரிடம் பரிசோதனை செய்த தில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை
யடுத்து 1,600 பேரிடமும் பரி சோதனை செய்யும் பணி தீவிரப் படுத்தப்பட்டது. இதில் 700 பேருக்கு வந்த பரிசோதனை முடிவுகளில் யாருக்கும் தொற்று இல்லை என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT