Published : 22 Oct 2015 01:54 PM
Last Updated : 22 Oct 2015 01:54 PM
ஜெருசலத்தில் பாலஸ்தீன தீவிரவாதி என நினைத்து யூதர் ஒருவரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பு செய்தி தொடர்பாளர் மிக்கி ரோசன்பெல்ட் தெரிவிக்கும்போது, “ஜெருசலத்தில் நிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேல் படையினர் நபர் ஒருவரை நிறுத்தி அவரிடம் அடையாள அட்டை கேட்டனர். ஆனால், அந்த நபர் கொடுக்க மறுத்தார். மேலும், ராணுவத்தினரிடையே இருந்த ஆயுதம் ஒன்றையும் அவர் பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர் ஒருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார், அந்த நபர் பிற்பாடு காயம் காரணமாக உயிரிழந்தார்” என்றார்.
அவர் நிச்சயம் பயங்கரவாதியாக இருக்க வேண்டுமென்றே ராணுவத்தினருக்கு கடும் சந்தேகம் எழுந்தது. அவர் தனது அடையாள அட்டையை தர மறுத்ததோடு, ராணுவத்தினரின் அடையாள அட்டையைக் கேட்டுள்ளார் என்றே இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்தன. இதனை ரோசன்பெல்ட் உறுதி செய்யவில்லை.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT