Published : 23 Dec 2020 04:38 PM
Last Updated : 23 Dec 2020 04:38 PM

கரோனா தற்காப்பில் முகக்கவசத்தைவிட தனிமனித இடைவெளி அவசியம்: ஆய்வில் தகவல்

முகக்கவசத்தைவிட தனிமனித இடைவெளியே கரோனா பரவுவதைத் தடுக்கும் என்று அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாண பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் உருமாறிய கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் செல்வதற்கான விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.

உருமாறிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் முகக்கவசத்தைவிட தனிமனித இடைவெளியே கரோனா பரவுவதைத் தடுக்கும் என்று அமெரிக்காவின் நியூ மெக்சிகோ ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நியூ மெக்சிகோ பல்கலைகழக பேராசிரியர் கூறும்போது, “ முகக்கவசம் அணிவது நிச்சயம் உதவும். ஆனால் இரண்டு நபர்கள் மிக அருகில் உள்ளபோது கரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று நாங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே முகக்கவசத்தைவிட தனிமனித இடைவெளி மிக முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்று 2 லட்சம் வரை பதிவாகி வருகிறது. எனவே அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கரோனாவால் உயிரிழக்க நேரிடலாம் எனவே மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அதிபர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x