Last Updated : 24 Oct, 2015 02:50 PM

 

Published : 24 Oct 2015 02:50 PM
Last Updated : 24 Oct 2015 02:50 PM

மாலத்தீவு அதிபரைக் கொல்ல சதிதிட்டம் தீட்டியதாக துணை அதிபர் கைது

மாலத்தீவு அதிபர் யாமீன் அப்துல் கயூம் சென்ற படகை வெடிகுண்டு வைத்து தகர்த்து அவரை கொல்ல உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டில் துணை அதிபர் அஹமத் அதீப் கைது செய்ப்பட்டார்.

சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த துணை அதிபர் அஹமத் அதீப், இன்று மாலத்தீவுக்கு திரும்பியபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டின் போலீஸ்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் அலி கூறியுள்ளார்.

இதனை அந்நாட்டு உள்துறை அமைச்சர் உமர் நஸீரும் தனது ட்விட்டர் பக்கத்தில் 'ராஜ துரோகம்' செய்த குற்றச்சாட்டில் துணை அதிபர் அஹமத் அதீப் கைது செய்ப்பட்டதாகக் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் சவுதி அரேபியாவில் மெக்கா, மதினாவில் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் தனது மனைவியுடன் புனிதப் பயணம் சென்றிருந்தார்.

பின்னர் டெல்லி விமான நிலையம் வந்து அரபிக் கடல் வழியாக அதிவேக படகின் மூலம் மாலத்தீவு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது படகு திடீரென்று கடலில் வெடித்து சிதறியது. இதில் அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவ்விபத்தில் காயமடைந்த அதிபரின் மனைவி பாத்திமா இப்ராஹிம், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூமை கொல்ல சதி நடந்ததாகவும், அதில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டதாகவும் அந்நாட்டு உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அவர்கள் ரகசியமாக விசாரித்து வந்ததை அடுத்து இந்த சதியில் மாலத்தீவு துணை அதிபர் அஹமத் அதீப்புக்கு தொடர்பு இருந்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x