Published : 04 Dec 2020 10:00 PM
Last Updated : 04 Dec 2020 10:00 PM
உலகம் முழுவதும் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6.5 கோடியை நெருங்கவுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “தற்போதைய நிலவரப்படி உலக முழுவதும் சுமார் 6, 47,74,705 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15,00,038 பேர் பலியாகி உள்ளனர். லத்தின் அமெரிக்க நாடுகளில் கரோனாவினால் அதிக பலி ஏற்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் கரோனாவுக்கு 4,52,263 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளின்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்து வந்தன.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம், பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக், ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் வெற்றி பெற்று தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
மேலும் உலகின் முதல் நாடாக, பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா தடுப்பு மருந்து குறித்து வரும் தகவல்கள் தனித்துவமாக உள்ளன. ஆரம்பக் கட்டத்தில் கரோனா தடுப்பு மருந்துக்குத் தட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு முதலில் கிடைக்க வேண்டும் என்று உலக நாடுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT