Published : 25 Oct 2015 12:36 PM
Last Updated : 25 Oct 2015 12:36 PM
இராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிர வாதிகள் தங்கள் பிடியில் உள்ள இடங்களில் எடுக்கப்படும் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
இப்பணத்தை கொண்டு ஆயுதம் வாங்குவது, இயக்கத்தில் சேர்பவர்களுக்கு சம்பளம் வழங்குவது போன்றவற்றை செய்து வருகின்றனர்.எண்ணெய் விற்பனை மூலம் மாதம்தோறும் சுமார் 300 கோடி ரூபாயை தீவிரவாதிகள் பெற்று வருவதாக ஈரான் உளவுத்துறையினரும், அமெரிக்க அதிகாரிகளும் உறுதிபடுத்தியுள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே சிரியா, இராக்கில் பல எண்ணெய் கிணறுகளை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து விட்டனர். எண்ணெய் எடுப்பது சுத்திகரிப்பது போன்ற தொழில்நுட்பங்களையும் அவர்கள் சில வெளிநாடுகளிடம் இருந்து பெற்று செயல்படுத்தி வருகின்றனர். சமீபகாலமாக இதற்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டு ள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT